கற்றது கடலளவு - கடைசி அத்தியாயம் 50
கடைசி அத்தியாயம் 50
சூயஸ் கால்வாய் இல்லாத நாட்களிலும், ஒரு காலக் கட்டத்தில் கால்வாய் மூடப்பட்ட சமயத்திலும், கப்பல் தொழில் மிகவும் சிரமமாகவே இருந்தது...
எகிப்து நாட்டின் குறுக்கே வெட்டப்பட்டுள்ள சூயஸ் கால்வாயின் மொத்த நீளம் சுமார் 193 கி.மீட்டர்.
அது இல்லாவிட்டால் இந்தியாவிலிருந்தும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஐரோப்பா செல்லும் கப்பல்கள் அனைத்தும், நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வரை சென்று சுற்றி வர வேண்டியிருக்கும்.
உதாரணத்திற்கு சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்திலிருந்து, கருங்கடல் துறைமுகமான 'கான்ஸ்டான்ஸா' செல்வதென்றால், சூயஸ் பயணத்தினால் 86 சதவீத தூரம் குறைகிறது.
இன்று, தினமும் சுமார் நூறு கப்பல்களுக்கு மேல் சூயஸ் கால்வாய் வழியே செல்கின்றன.
சூயஸ் கால்வாய் இல்லாவிட்டால், அதனால் ஏற்படும் அதிக செலவைத் தாக்குப்பிடிக்க முடியாமல், பல கப்பல் கம்பெனிகள், தங்களின் தொழிலை மூடி வைத்து விட வேண்டியதுதான்.
ஏராளமான கப்பல்வாசிகளும், தங்களின் வேலையை இழக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும்.
சூயஸ் கால்வாய் எத்தனையோ கப்பல்வாசிகளின் குடும்பத்தை காப்பாற்றி அவர்களின் ' கால் வாய் 'க்கு மட்டுமல்ல, முழு வயிற்றுக்குமே உணவிடும் அன்னை.
மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இந்தக் கால்வாயை கட்டும் முயற்சிகள் கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்து விட்டதாக சரித்திரச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் தற்போதைய சூயஸ்கால்வாய் செங்கடலையும், மத்தியதரைக் கடலையும் நேரடியாக இணைப்பது போல் முன்பு நேரடியாக இணைக்க முயற்சிக்கவில்லை.
அவர்கள் நைல் நதியுடன் செங்கடலை இணைத்தனர்.
கி.பி. 1800 - வாக்கில் பிரான்ஸின் Napaolean Bonaparte -ன் இன்ஜினீயர்கள் இந்தியாவுக்கு செல்வதற்கான சுருக்கமான கடல்வழியை ஏற்படுத்தும் எண்ணத்திற்கு மறுஉயிர் கொடுத்தனர்.
பிரெஞ்சு இன்ஜினீயர்களின் கணக்குப்படி, செங்கடலின் மட்டத்திற்கும், மத்தியதரைக்கடலின் மட்டத்திற்கும் சுமார் 10 மீட்டர் வித்தியாசம் இருப்பதாகத் தோன்றியது...
அதனால், அந்த நிலையில் கால்வாய் கட்டினால், ஏராளமான நிலப்பகுதி வெள்ளத்தால் மூழ்கும் அபாயம் இருப்பதாக நினைத்தார்கள்.
ஆனால் அவர்களின் கணக்கு தப்பு என்று தெரியவந்து, பின்னாளில் கால்வாய் கட்டினால் பிரச்சனையில்லை என்று முடிவு செய்தனர்.
கடைசியில் 1859 -ல் எகிப்திய தொழிலாளர்கள் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டு, அந்தக் கால்வாய் கட்டும் பணி தொடங்கியது.
ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் எகிப்திய தொழிலாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட இந்தக் கால்வாயின் கட்டுமானப் பணியில் உயிரை இழந்தவர்களின் எண்ணிக்கை 1,15,000 -க்கும் அதிகம்.
1867 -ல் திட்டம் முடிக்கப்பட்டு, 1869 -ம் ஆண்டு நவம்பர் 17 -ல் அதிகாரப்பூர்வமாக கப்பல் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
1956 -ல் எகிப்து நாட்டிற்கு சொந்தமாக்கப்பட்டது.. (அதற்கு முன் 87 வருட காலங்கள் சர்வதேச கம்பெனியாக இருந்து வந்தது.)
1967 -ல் ஏற்பட்ட அரபு - இஸ்ரேலிய சண்டைக்குப்பின் கால்வாய் மூடப்பட்டு, அதன்பின் 1975 -ல் மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.
சூயஸ் கால்வாய் போல், கப்பல் போக்குவரத்துக்கு மிகவும் பயன்படும் இன்னொரு கால்வாய் 'பனாமா கால்வாய்'...
பசிபிக் பெருங்கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைத்து, எத்தனையோ கப்பல்கள் தென்அமெரிக்கக் கண்டத்தின் கிழ்ப்பகுதியான 'கேப் ஹார்ன்' (Cape Horn) வரை சென்று சுற்றிவர வேண்டிய தூரத்தை, பலமடங்கு குறைக்க பனாமா கால்வாய் உதவி செய்கிறது.
வட அமெரிக்கக் கண்டத்திற்கும்,தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையேயுள்ள பனாமா நாட்டின் குறுகிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கால்வாய்க்கும், சூயஸ்கால்வாய்க்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது...
சூயஸ் கால்வாயின் மொத்த நீளத்திற்கும், தண்ணீரின் அளவு கிட்டத்தட்ட ஒரே மட்டமாக இருக்கும்.
ஆனால், பனாமா கால்வாய் அமைந்துள்ள இடத்தில் மலைப்பகுதிகளும், ஏரியும் அமைந்து, அவற்றில் தண்ணீரின் மட்டம் கடல் நீரின் மட்டத்தைவிட அதிக உயரத்தில் இருப்பதால், அதன் மொத்த நீளமும் வேறு வேறு மட்டத்தில் உள்ளது...
அதற்காகத்தான் பனாமா கால்வாயில் நிறைய 'லாக்ஸ்' (Locks) எனப்படும் அமைப்புகள் உண்டு... பனாமா கால்வாயில் மட்டுமல்ல...
நிறைய துறைமுகங்களில், குறிப்பாக நதிகள் கடலோடு கலக்கும் இடங்களில் இந்த 'லாக்ஸ்' என்றழைக்கப்படும் அமைப்புகள் உள்ளன.
ஒரு பக்கம் உயரமாகவும், அடுத்த பக்கம் தாழ்வாகவும் தண்ணீர் மட்டம் இருக்கும் இடத்தில் மூடப்பட்ட தொட்டி போன்ற அமைப்பிலான இந்த லாக்ஸ் இருக்கும்.
இது கிட்டத்தட்ட 'டிரைடாக்கு'கள் (Duy Docks) போலத்தான்...
(Dry Docks பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளேன்.) 'டிரைடாக்கு'களுக்கு ஒரு பக்க கதவு உண்டு... ஆனால் லாக்குகளுக்கு இருபக்கமும் கதவுகள் உண்டு.
முதலில் ஒரு பக்கக் கதவு திறக்கப்பட்டு, கடல்நீர் லாக்கின் உள்புறம் சென்று ஒரே மட்டமாகிவிடும்.
இப்போது கப்பல் உள்ளே கொண்டு வரப்படும். அதன்பின் திறக்கப்பட்ட கதவு மூடப்படும்..
தற்போது அந்த நீர் மட்டம் ஏரியிலிருந்து தண்ணீரை லாக்கினுள் திறப்பதன் மூலம் அதிகப்படுத்தப்பட்டு, எதிர்ப்பக்கம் உள்ள தண்ணீரின் மட்டத்திற்கு உயர்த்தப்படும்...
இப்போது மறுபக்கக் கதவு திறக்கப்பட்டு, அதன் வழியே கப்பல் எதிர்ப்புறம் செல்லும்.
பனாமா கால்வாயில் வரிசையாக அடுத்தடுத்து ஒன்றையொன்று ஒட்டியபடி, மூன்று லாக்குகள் உண்டு.
கால்வாயின் உள்ளே கப்பலின் பயணம், ஏரி, மலைப்பகுதிகளின் இடையேயான நீர்ப்பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும்.
மொத்தப் பயணத்தையும் பார்த்தால் கப்பல் படிக்கட்டுகளின் வழியே ஏறி இறங்கியது போல் தோன்றும்.
அந்த லாக்குகளின் உள்ளே கப்பல் பயணம் செய்யும் போது, இரண்டு புறமும் பக்கவாட்டில் இருந்து கப்பலை இழுத்துச் செல்ல இரயில் இன்ஜின்களைப் பயன்படுத்கிறார்கள்.
பனாமா கால்வாயின் வழியே பயணம் செய்வதே ஒரு மகிழ்ச்சியூட்டும், பரவசமான அனுபவம் என்று எனது நண்பர்கள் கூறுவார்கள்.
எனக்கு இதுவரை அதன் வழியே பயணம் செய்யும் வாய்ப்பே கிடைக்கவில்லை...
குறிப்பிட்ட சைஸுக்கு மேல் உள்ள கப்பல்கள், கால்வாயின் வழியே செல்லமுடியாது...
பசிபிக்கிலிருந்து அட்லாண்டிக் கடலுக்கு வர நேரிட்ட இரண்டு முறையும், நான் தென் அமெரிக்கா கண்டத்தின் கீழ்ப்பகுதி வழியாகவே சென்றேன்.
சூயஸ், பனாமா கால்வாய்களைத் தவிர ஐரோப்பாவின் இடையே ' கீல் கனால் ' என்ற நீண்ட கால்வாயும் உண்டு...
நிறைய ஐரோப்பிய நாடுகளின் வழியே செல்லும் ஒரு நீர்வழியான இந்த கால்வாயின் ஊடே பயணம் செய்வதும் ஒரு இனிமையான அனுபவம்...
இரண்டுபுறமும் பச்சைப் பசேலென்ற இயற்கைக் காட்சிகளின் அணிவரிசை...
இங்கிலாந்திற்கும் மற்ற ஐரோப்பா நாடுகளுக்கும், (குறிப்பாக ஃபிரான்ஸ்) இடையேயுள்ள ஆங்கில கால்வாய் (English channel) ஒரு பரபரப்பு அதிகமான நீர்வழி...
பெரிய கப்பல்கள் மட்டுமின்றி சின்னக் கப்பல்களும், ·ஃபெர்ரீஸ் (Ferrys) எனப்படும் சிறிய பயணிகள் படகுகளும் ஏராளமாக குறுக்கும் நெடுக்குமாக போய்க் கொண்டே இருக்கும்.
ஆங்கிலக் கால்வாய் மற்ற கால்வாய்களைப் போல் குறுகிய நீர்வழி இல்லை என்றாலும், இங்குள்ள அதிக போக்குவரத்தினாலும், பனிமூட்டத்தினாலும் இங்கும் விபத்துகள் நடந்துள்ளன.
தற்போது தகவல் தொடர்பு எவ்வளவோ வளர்ந்து விட்டது... ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் சேர்ந்த புதிதில் இந்த அளவு முன்னேற்றம் கிடையாது.
கப்பலில் உள்ளவர்களுக்கு வீட்டிலிருந்து தகவல் சொல்ல வேண்டுமானாலோ, கப்பலிலிருந்து வீட்டுக்கு செய்தி தெரிவிப்பது என்றாலோ இன்று 'ஸாட்டிலைட்' தொலைபேசி மூலம் உடனுக்குடன் பேசி விட முடிகிறது.
ஈ-மெயில் வசதியும் வந்து விட்டது...
வெளிநாட்டு கப்பல்களில் இந்த வசதி முன்பே வந்து விட்டாலும், இந்தியக் கம்பெனி கப்பல்களில் இருக்கும் அனைவராலும் இது பயன்படுத்தப்படுவதில்லை.
மேலும் நிறைய இந்தியக் கம்பெனிகளில் கேப்டன் விருப்பத்தின் பேரில் மட்டுமே இது வழங்கப்படுகிறது.
அவரும், அவர் யாருக்கு அனுமதி வழங்குகிறாரோ, அவர்கள் மட்டுமே இந்த வசதிகளை கப்பலில் அனுபவிக்கிறார்கள்.
நான் வேலை செய்த பிரிட்டிஷ் கம்பெனியில் இப்படிக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது... விதிகள் அனைவருக்கும் பொதுவானதாகவே இருந்தது.
யார் வேண்டுமானலும் ஈ-மெயில் வசதியைப் பயன்படுத்த முடிந்தது.
ஆனால் கடைசியாக வேலை செய்த இந்தியக் கப்பலில், கப்பலின் ஈ-மெயில் அடையாளப் பெயர் கூட யாருக்கும் தெரிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
அதைக் கேப்டனும் அவர் யாருக்கு அந்த வசதியைக் கொடுக்க விரும்புகிறாரோ அவர்களும், மட்டுமே உபயோகித்தையும் பார்த்த போது வருத்தத்தையே தந்தது.
மேலும் வெளிநாட்டுக் கப்பல்களில், ஆபிஸர்களாக இருந்தாலும் (அவர் கேப்டன் பதவியில் இருப்பவரானாலும்) மற்ற பணியாளர்களிடம் சகஜமாக பழகுவதையே அதிகம் பார்க்கமுடியும்.
ஆனால் இந்தியக் கப்பல்களில் அப்படிப்பட்ட ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை.
ஆபிஸர்கள், மற்ற பணியாளர்களிடத்தில் ஒருவித இடைவெளியைக் கடைபிடித்து, தாங்கள் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் என்பதை வெளிக்காட்டிக் கொள்வதைப் பார்க்க முடியும்.
இதேபோல், இந்தியக் கப்பல்களில் வாழ்க்கை முறைக்கும், வெளிநாட்டு கப்பல் வாழ்விற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.
சம்பளத்தில் கூட இந்தியக் கப்பல்களில் ஒரு பதவிக்குக் கிடைக்கும் பணத்தை விட, வெளிநாட்டுக் கம்பெனியில் மிக அதிகமாகக் கிடைக்கிறது.
கப்பலில் இன்ஜினீய்ர் வேலைக்குச் சேர பொதுவாக மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் டிகிரி முடித்துவிட்டு, கப்பல் கம்பெனிகள் அதற்க்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யும் போது விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம்.
ப்ளஸ்-டூ மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு வருடந்தோறும் நடைபெறுகிறது...
அந்தப் பரீட்சை எழுதினால், ப்ளஸ்-டூ முடித்தவுடன் மெரைன் இன்ஜினீயரிங் பயிற்சியிலோ, நேவிகேட்டிங் ஆபிஸராக சேரும் பயிற்சியிலோ சேரமுடியும்.
கப்பலில் பணியாளர்களாகச் சேர்வதற்கான பயிற்சிகளை தமிழ்நாடு கடல்சார் வாரியம் நடத்துகிறது. தூத்துக்குடியில் உள்ளது இந்த நிறுவனம்.
மேலும் பல தனியார் நிறுவனங்களும் பயிற்சிகள் நடத்துகின்றன.
கப்பல் வேலையில் சேர்வதற்காக நடத்தப்படும் பயிற்சிகள் முடித்த எல்லோருக்கும், வேலை கிடைத்து விடுவதில்லை.
எனவே பெரும்பணத்தைச் செலவழித்து, இந்தப் பயிற்சி செய்யப் போகும் முன், அதன்பிறகு வேலை வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை நன்றாக விசாரித்த பின்பு சேருவதே நல்லது.
சென்னையிலுள்ள மெர்க்கன்ட்டைல் மெரைன் டிபார்ட்மெண்ட் (Mercantile Marine Department -MMD) பீச் ஸ்டேஷன் அருகில் உள்ளது.
இது கப்பல்துறை பற்றிய விதிகளை அமுல்படுத்தவும், அது சம்பந்தப்பட்ட வேலைகளுக்கான தேர்வுகளையும் நடத்தும் இந்திய அரசின் நிறுவனம்.
கப்பல் வேலையில் சேர விரும்புவர்கள் இந்த அலுவகத்தில் சென்று விசாரித்தால், எப்படி கப்பல் வேலைக்கு சேர்வது, எங்கெங்கே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்ற எல்லா விவரங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்...
வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் ஏமாறாமல், சரியான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள இது போன்ற அரசு நிறுவனங்களை அணுகி முழு விவரமும் தெரிந்து கொள்ளலாம்...
தங்களுடைய கல்லூரியிலோ, நிறுவனத்திலோ நடத்தப்படும் பயிற்சி முடித்தால் உடனடியாக கப்பலில் வேலை காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லி, பணத்தைப் பறிக்கும் பயிற்சி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.
ஒரு நிறுவனம் நடத்தும் அந்தப் பயிற்சி அல்லது ஒரு கல்லூரியில் உள்ள மெரைன் இன்ஜினீயரிங் கோர்ஸ், அரசால் (Director General of Shipping, MMD போன்றவையால்) அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து விட்டபின் அந்தப் பயிற்சியில் சேர வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்!
நன்றி...
எனக்கு கடலை அறிமுகம் செய்த திரு. 'கடலோடி' நரசய்யாவுக்கும், என்னைப் பத்திரிக்கையாளனாக உருவாக்கிய ஆனந்த விகடனுக்கும் (ஜூனியர் விகடனுக்கும்), என் வாழ்க்கைப் பாதையில் என் மீது நிஜமான நேசம் காட்டிய எல்லோரின் அன்பிற்கும் எனது நன்றி.
கற்றது கடலளவு தொடரை வலைஉலகத்தில் பகிர்ந்து கொண்டது எனக்கு மிகவும் இனிய அனுபவம். இத்தொடர் நல்ல நண்பர்களை அறிமுகப்படுத்தி மன நிறைவை அளித்துள்ளது. வலையுலக நண்பர்கள் கடிதங்களின் மூலமாகவும், பின்னூட்டங்களின் மூலமாகவும் அளித்த ஆதரவுக்கும் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்கள் என் வாழ்வில் எல்லாக் கட்டங்களிலும் துணை நின்று என்னை வழி நடத்தியவர்கள். இந்தத் தொடர் இணையத்தில் வெளியான போதும் நான் இல்லாதபோது தொடரைத் தொடர்ந்து தவறாமல் பதிவிட்டவர்கள் என் அன்பு நண்பர்கள்தான்.. அவர்களுக்கு நன்றி சொல்வது அவசியமற்றது.. அவர்கள் என் வாழ்வில் எப்போதும் துணை நின்று வழி நடத்துபவர்கள்.. இருந்தாலும் என் அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைகிறேன்.
மீண்டும் விரைவில் புதிய அனுபவங்களுடன் இன்னொரு தொடர் வழியாக உங்களை சந்திக்கும் வரை..
என்றும் அன்புடன்
கடல்கணேசன்.
இத்துடன் கற்றது கடலளவு தொடர் முற்றும்...
__________________________________________________
(இந்தத்தொடர் "ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்தபோது 'கற்றது கடலளவு'என்ற தலைப்பு 'விகடன் ஆசிரியக் குழு'வினரால் தேர்ந்தெடுக்கப் பட்டது. மனதில் பதியக்கூடிய தலைப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வைக்கப்பட்ட தலைப்பே தவிர 'நான் கற்றது கடல் அளவு' என்ற அர்த்தத்தில் அல்ல.
தற்போது இந்தியக் கப்பல் கம்பெனி ஒன்றில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் நான் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் கரைக்கு வருகிறேன். அப்போது வலையுலகில் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வேன்..
ஆனாலும் ஐஸ்-க்ரீமில் (தாரிணி) எனது கவிதைகள் (கிறுக்கல்கள்) அவ்வப்போது தொடரும்..)
http://www.pearlshell.blogspot.com/
____________________________________________