என் மனம், அலை பாயுதே...

கற்றது கடலளவு - அத்தியாயம் 38

அத்தியாயம் 38


நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..


லகக் கப்பல் வரலாற்றில் கிரேக்கர்களுக்கென்று தனி இடம் கண்டிப்பாக உண்டு.. எந்த மாதிரி கப்பல் என்றாலும் சமாளித்து ஓட்டுவதில் வல்லவர்கள் அவர்கள்.

"கிரீக் ஷிப்பில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் எத்தகைய கப்பலையும் ஓட்ட முடியம்" என்பது கப்பல் வேலையில் உள்ள எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
அவர்களின் வழியே தனி வழிதான்.

"பழைய இரும்பு, தகரம், ஈயம் பித்தாளைக்குப் பேரீச்..சம்பளம்.." என்று தெருக்களில் கூவி விற்பவர்கள் யாராவது அணுகினால் கப்பலையே விற்றுவிட்டு பேரீச்சம்பழம் வாங்கிச் சாப்பிடலாம் என்ற நிலையில் உள்ள பழைய்ய்ய கப்பல்கள்..

அதேபோல், கிரேக்கக் கம்பெனிகளுக்குச் சொந்தமான கப்பல்களில் சேர மற்ற நாட்டுக் கம்பெனிகளில் உள்ளது போல், முறையான சர்ட்டிபிகேட்டுகள் இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. சர்ட்டிபிகேட் இல்லாதவர்களையும் வைத்து சமாளித்து வந்தனர்.


ஜோதிக்குமார் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயராக சேர்ந்தாலும், மூன்றாவது இன்ஜினீயர் வேலையையும் பார்த்துக் கொண்டார்.

இந்தியக் கம்பெனி கப்பல்களைத் தவிர மற்ற வெளிநாட்டு கம்பெனி கப்பல்களில் சேரும் இந்தியர்கள், நம்மூர் சாப்பாடு கிடைக்காமல் சிரமப்படுவார்கள்..

ஆனால் அரிசி சாதம், காய்கறிகள் என்று ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளுமளவு சாப்பாடு இருப்பதால் சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் அதையும் இங்கே எதிர்பார்க்க முடியாது என்று தெரிந்து விட்டது.

எல்லாமே ஐரோப்பிய வகை சாப்பாடுதான். அதிலும் கிரேக்க ஸ்டைலில்.. வாரத்தில் ஒரே ஒரு வேளை மட்டும் அரிசிச்சோறு..

அதற்கு சேர்த்துக்கொள்ள டின்னில் அடைக்கப்பட்ட பெயர் தெரியாத ஏதோ ஒரு கீரை. அத்துடன் வெண்ணெய் அல்லது 'சீஸ்' . இதையெல்லாம் கலந்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்..

அது ஒன்றுதான அரிசி சம்பந்தப்பட்ட உணவு. மற்ற நாட்களில் மூன்று வேளையும் பிரெட். அதனுடன் சேர்த்து சாப்பிட, வேக வைத்த இறைச்சி.

கப்பலில் உணவுப் பொருட்கட்ளை குளிர் செய்யப்பட்ட அறைகளில் வைத்திருப்பார்கள்.
மீன், இறைச்சி முதலியவற்றை சுமார் -20 டிகிரி சென்டிகிரேடிலும், காய்கறி, பால் முதலிவற்றை +4 டிகிரியிலும் வைத்திருப்பார்கள்.

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அறைகள் உண்டு. ஒரு துறைமுகத்திலிருந்து இன்னொரு துறைமுகம் செல்லும் வரைக்கும் தேவையான உணவுப் பொருட்களை மொத்தமாக முந்தைய துறைமுகத்திலேயே வாங்கிக் கொள்வார்கள்.

பத்து நாள் தூரத்தில் போய்ச் சேரும் பயணமும் உண்டு. அறுபது, எழுபது நாட்கள் கரையைத் தொடாமல் செல்லும் பயணமும் உண்டு..

எல்லாவற்றையும் சமாளிக்க குளிர்பதனம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களே.
புத்தம் புதிதாக வாங்கும் பொருட்களில் இருக்கும் ருசியை இதில் எப்படி எதிர்பார்க்க முடியும்.
அதிலும் இந்திய உணவுகள் இல்லையென்றால்..

'கோல்டு ரூம்' என்று அழைக்கப்படும் இறைச்சி வைக்கப்பட்டுள்ள அறைகளில் நுழைந்து பார்த்தால் மயக்கம் வரும் அளவுக்கு, இரத்தமும் சதையுமாக இறைச்சி தொங்கிக் கொண்டிருக்கும்.

அதிலிருந்து, தினமும் அன்றாட தேவைக்கேற்ப இறைச்சி மற்றும் மீன் முதலியவற்றை சமையல் செய்பவர் எடுத்து வருவார். அதை அவர் சமைக்கும் ஸ்டைலே தனி.

கிரேக்க கப்பல்களில் சமைப்பவரை ' மாய்க்ககரா ' என்று அழைக்கிறார்கள்.
அரையடிக்கு அரையடி சைஸில் உள்ள இறைச்சித் துண்டை நடுவில் பெரிய துளையிட்டு, அதனுள் பூண்டை அடைத்து அப்படியே தண்ணீரில் கொதிக்க வைப்பார்கள்..

அரை வேக்காடு.. பின்பு அதை எடுத்து பிரெட் வெட்டும் கத்தியால் பிரெட் அளவுக்கு துண்டு போட்டு விடுவார்கள். அவ்வளவுதான்..

பிரெட், இந்த வேகவைத்த இறைச்சி, தொட்டுக் கொள்ள சட்னி மாதிரி ஏதோ ஒன்று... சட்னியை வாயில் வைக்கச் சகிக்காது.. இதுதான் தினசரி உணவு...

ஆனால், பின்னர் இதுவே பழக்கமாகிப் போய், அந்தச் சட்னி இல்லாவிட்டால் சாப்பிட்ட மாதிரியே இருக்காது என்ற அளவுக்கு அது பிடித்துப்போனது.

சில சமயம் மீன், நண்டு, கோழிக்கறி முதலியவையும் உண்டு.. அதை சமைக்கும் முறையும் கிட்டத்தட்ட ஒன்றுதான்..

அவற்றோடு தண்ணீர், உப்பு சேர்த்து எண்ணெயில் அப்படியே கொதிக்க வைத்து விடுவார்கள். அவ்வளவே..

தினசரி உணவு என்பது இதுதான். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது போகப்போக பழகி விட்டது..

உணவு என்பது இந்த அளவுக்கு பிரச்சினையான விஷயம் என்று சொன்ன ஜோதிக்குமார், கிரேக்கக் கப்பல் வாழ்க்கை பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

"அங்குள்ள யாவருக்கும் ஆங்கிலமே தெரியாது.. எல்லாம் 'கிரீக்' பாஷைதான்.. கேப்டனுக்கு மட்டும் கொஞ்சம் ஆங்கிலம் தெரியும். எப்படியோ சமாளிக்க வேண்டியிருந்தது"..

ஒரு நாள் கேப்டன் ரூமிற்கு அழைத்தார்.. கம்பெனியின் இன்னொரு கப்பலுக்கு அவசரமாக ஒரு எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர் தேவைப்படுவதாகவும் என்னை அந்தக் கப்பலுக்கு அனுப்பப் போவதாகவும் சொன்னார்.

அந்தக் கப்பலில் மூன்றாவது இன்ஜினீயராக ஒரு இந்தியர் இருப்பதாகச் சொன்னவுடன் நான் உடனே என்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்ட புறப்பட்டுவிட்டேன்.

கப்பல் பர்மாவில் இருந்தது.. ரொம்ப சந்தோஷத்தோடு பர்மா போய்ச் சேர்ந்த நான் கப்பலைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் அப்படியே ஓடி வந்துவிடலாமா என்று நினைத்தேன்.

ஏர்போர்ட்டில் கைலி கட்டிய ஒருவர் வரவேற்பார் என்று சொல்லியிருந்தார்கள்.

அங்கே இறங்கிப் பார்த்தால் நின்றிருந்த எல்லோருமே கைலி கட்டியிருந்தார்கள். இதில் யாரைப் போய் நான் பிடிப்பது.

நான் 'திருதிரு' வென்று முழிப்பதைப் பார்த்து வேகமாக என்னை நோக்கி ஒருவர் வர ஆரம்பித்தார். லுங்கி கட்டியிருந்தார்..

முழுக்கை சட்டை போட்டு, லுங்கியை சட்டைக்கு மேல் பேண்ட் போடுவது போல் 'இன்' செய்திருந்தார்.

'அப்பாடி.. வந்து விட்டார்' என்று நான் நிம்மதி பெருமூச்சு விட்ட நேரம் என்னை நெருங்கிய அவர், "எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார். தன்னை விமானநிலைய அதிகாரி என்று சொன்னார்.

நான், போன கப்பலில் இருந்து இறங்கி இந்தியா சென்று, இந்தியாவிலிருந்து நேரடியாக பர்மா வராமல் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்து, அங்கே இரண்டு நாள் ஹோட்டலில் தங்கி, பின் அங்கிருந்து பங்களாதேஷ் போய் கடைசியாக பர்மா வந்திருந்தேன்...

நேராக மூக்கைத் தொடாமல், தலையைச் சுற்றியதோடு மட்டுமில்லாமல் காது, கண் எல்லாவற்றையும் தொட்டுவிட்டு வந்தது மாதிரி.

அப்போது பர்மாவில் ராணுவ ஆட்சி நடந்து கொண்டு இருந்தது.

நான் இந்தியாவிலிருந்து நேராக பர்மாவுக்கு வராமல் சிங்கப்பூர், பங்களாதேசம் வழியாக வந்ததால் அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது.

கப்பல் கம்பெனியோ, அவர்களின் வசதிப்படி இந்த மாதிரி விமான ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நான் கப்பலில் அவசரமாக சேர வேண்டியிருந்தது பற்றியும், விமான சர்வீஸில் நேரடி டிக்கெட் கிடைக்காததால் இந்த ஏற்பாடு செய்ததையும் சொன்னேன்.

ஒரு வழியாக திருப்தியடைந்து அவர் ஆளை விட்டார். என்னை வரவேற்க வந்த நபர், தாமதமாக வந்து கூட்டிப் போனார்.

கப்பல் நிற்கும் இடம் போனதும் மனதிற்குள் ஏதோ வித்தியாசமாகப் பட்டது.

கப்பலின் ஏணியில் ஏற முற்படும்போது எதிரே ஒருவர் கப்பலிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.

கையில் சோப்பு, துண்டு சகிதம் பக்கெட்டுடன் இறங்கி வந்தவர் ஒரு கிரேக்கர்...
நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன், அவர் "யூ எலக்ட்ரோலக்?.. குட்" என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, அதன்பின் வேகமாக ஏதோ 'கிரீக்' கில் சொன்னார்.

கப்பல் எனக்காகக் காத்திருப்பதாகவும் கப்பலில் மின்சாரம் இல்லையென்றும் அதனால் குளிப்பதற்கும், டாய்லெட் போவதற்கும் கரையில் உள்ள ஓர் இடத்திற்குப் போவதாகச் சொல்லிவிட்டு, அவசரமாக ஓடும் அவரைப் பார்த்து நான் அங்கேயே நின்றுவிட்டேன்.


-தொடரும்.

9 Comments:

  • இன்னிக்கு நாந்தானே முதல்? எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    By , at January 15, 2007 6:53 AM  


  • சரியாப்போச்சு. இந்த மாதிரி கப்பல் எல்லாம் எப்படி அனுமதிக்கறாங்க? இதையெல்லாம் பார்த்துக்க எந்த விதமான கண்ட்ரோலும் கிடையாதா?

    By , at January 15, 2007 6:56 AM  


  • கிரேக்கத்தொடரா??
    போடுங்க போடுங்க..
    பொங்கல் கிடைக்கிற ஊரில் இருக்கீங்களா? இல்லையா?

    By , at January 15, 2007 6:58 AM  


  • பொங்கலோ பொங்கல்!
    பொங்கல் நல்வாழ்த்து!

    By , at January 15, 2007 7:11 AM  


  • இனிய பொங்கல் நல்வாழத்துக்கள்

    கேப்டன்,

    இப்போ கடல்ல இருக்கீங்களா? கரையில இருக்கீங்களா?

    லீவுல ஊருல இருக்கீங்களா....?

    By , at January 15, 2007 8:20 AM  


  • இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்:)

    By , at January 15, 2007 3:09 PM  


  • Pongal vazhththukkal,KGS.
    Greek kappalil anubavama ini? each and every episode is interesting.Nadathunga Sir.Nangalum niraya katruk koLgirom.Thanks

    By , at January 15, 2007 9:29 PM  


  • aajar!

    By , at January 16, 2007 3:04 AM  


  • Hi Ganesh Sir,
    Comments for Chap 38 - Very brief Chapter. Better Late Never.
    "Happy Christmas - Happy New Year - Happy Pongal" - In short Season's Greetings - Right ? May God Bless

    By , at January 20, 2007 10:30 AM  


Post a Comment

Links">


Links to this page:

Create a Link

<< முகப்பு